செய்திகள்

ஹஜ் யாத்திரைக்காக மக்கா செல்லவுள்ள 3,750 இலங்கையர்கள்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக சுமார் 3,750 இலங்கையர்கள் புனித நகரமான மக்காவிற்கு விஜயம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்த இலங்கைக்கான ஹஜ் கோட்டா எதுவாக இருந்தாலும், கடந்த ஆண்டு...

டிக்கிரி ஜயதிலக்கவுக்கு புதிய பதவி

நாடாளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக்க அதன் தலைமை அதிகாரியாகவும் பிரதி செயலாளர் நாயகமாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (24) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.

ஆசிரியர் மீது தாக்குதல் – மாணவர்கள் 5 பேரிடம் விசாரணை

புத்தளம் பகுதியில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் ஐவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரத்திற்கு தோற்றவுள்ள ஐந்து மாணவர்களிடமே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...

பாடசாலை புத்தகப் பைகள் – காலணிகளின் விலை குறைப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தகப் பைகள் - காலணிகளின் விலைகளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, அவற்றின் விலையை 10% குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்...

மீண்டும் தலைதூக்கும் கொவிட்

நேற்றைய தினம் (23) மேலும் 13 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார்.நேற்று (23) சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி, அந்நாட்டின் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கே.சண்முகம் மற்றும் நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் பலரை சந்தித்துப்...

ஒருவர் சுட்டுக்கொலை

ஹபராதுவ - பொல்துவ விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் மனைவியும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தம்பதியினர் தங்கள் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்று திரும்பி வரும்போது இந்த...

ஸ்ரீலங்கன் விமானம் தாமதம்: தென்கொரிய வேலைவாய்ப்பை இழந்த 48 இலங்கையர்கள்

தென்கொரியாவுக்கு பணியாளர்களாக செல்லவிருந்த 48 பேர் தமது தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.நேற்றிரவு 8.05க்கு தென்கொரியாவின் இச்சிகோனுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் 10 மணிநேரம் தாமதமாகியமையே இதற்குக்...

கஜேந்திரன் எம்.பி உட்பட ஐவர் விடுதலை

நேற்று (23) கைது செய்யப்பட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் காங்கேசந்துறை ஸ்ரீ திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக எம்.பி...

Popular

Latest in News