Thursday, April 25, 2024
33 C
Colombo

அரசியல்

ரணில் – பசில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான பல்வேறு...

SLFP தலைவர் பதவியிலிருந்து மைத்திரி தற்காலிக இடைநிறுத்தம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செய்த முறைப்பாடு தொடர்பில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துமிந்த, லசந்த, மஹிந்த ஆகியோரை நீக்க இடைக்காலத் தடை

துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில்...

தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை – வஜிர அபேவர்தன

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...

SLPPயின் தேசிய அமைப்பாளராக நாமல் நியமனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை – ஜனாதிபதி

ஆளும் கட்சியினால் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாக்கும் ஒரேயொரு ஆசியா நாடு இலங்கை மட்டுமே என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு சகலருக்கும் தமது கருத்துக்களை...

எந்த தேர்தலும் ஒத்திவைக்கப்பட மாட்டாது!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக எந்தவொரு தேர்தலையும் பிற்போட எதிர்பார்க்கவில்லை என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 1994ஆம் ஆண்டு முதல்...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர் யாரென்பது எனக்கு தெரியும் – மைத்ரிபால

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை வெளியிடத் தயார் என்றும் அவர் கூறினார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

ரணில் – பசில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (21) பிற்பகல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள்...

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க விசேட சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (20) கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும்...

Popular

Latest in News