செய்திகள்உள்நாட்டுஆசிரியர் மீது தாக்குதல் - மாணவர்கள் 5 பேரிடம் விசாரணை

ஆசிரியர் மீது தாக்குதல் – மாணவர்கள் 5 பேரிடம் விசாரணை

புத்தளம் பகுதியில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் ஐவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரத்திற்கு தோற்றவுள்ள ஐந்து மாணவர்களிடமே இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் குறித்த ஐந்து மாணவர்களையும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆசிரியர் கண்டித்துள்ளார்.

இந்நிலையிலேயே நேற்று மாலை ஆசிரியரின் வீட்டிற்கு சென்ற மாணவர்கள் ஆசிரியரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில மாணவர்கள் தலைமறைவாகியுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles