கனடாவில் பேருந்து – பாரவூர்தி மோதி விபத்து: 15 பேர் பலி
கனடாவின் மெனிபோட்டா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்தும் பாரவூர்தியும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்தை அடுத்து பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதாக...
ஈஸ்டர் தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது, கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவர் தமக்கு வழங்கப்பட்ட கடமைகளை செய்யத் தவறியமைக்காக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.இது குறித்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவருக்கு...
இரு அரச திணைக்களங்கள் மூடப்பட்டன
உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் மற்றும் தொலைத்தொடர்புத் திணைக்களத்தை கலைத்தல் மற்றும் மூடல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் இலங்கை வந்த சொகுசு கப்பல்
சென்னையில் இருந்து நூறு பயணிகளுடன் முதலாவது சொகுசு கப்பல் காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பலை கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அடங்கிய குழுவினர் வரவேற்றனர்.காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில்...
குறுந்தூர்மலை காணி யாருக்கும் கொடுக்கப்படாது!
முல்லைத்தீவு குறுந்தூர் மலை காணியை வேறு யாருக்கும் கொடுக்க தீர்மானிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகம், தொல்பொருள் துறை நிபுணர் எல்லாவல மேதாநந்த தேரருக்கு உறுதிபடுத்தியுள்ளது.தொல்பொருள் பெறுமதிமிக்க இந்த காணியில் இந்து மற்றும் பௌத்த...
இன்று சில பகுதிகளில் சீரற்ற வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்...
பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு முதலிடம்
Times Higher Education World ranking இன் படி, பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது.டைம்ஸ் உலகத் தரவரிசை ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன்...
60 வகையான மருந்துகளுக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்
எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் 60 ஒளடதங்களுக்குரிய விலை குறைக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, 60 ஔடதங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்...
துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலி
மெதிரிகிரிய - மிரிசேன பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சம்பவத்தில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாண் விலையில் மாற்றம் இல்லை
பாண் விலையில் மாற்றம் இல்லை என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.இன்று பாண் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட இருந்ததுடன், அது நடைபெறாது என சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.உரிமம்...
Popular
