Wednesday, May 13, 2026
24.5 C
Colombo

செய்திகள்

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு

ஊரடங்குச் சட்டத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜொன்ஸ்டனின் வீட்டின் மீது தாக்குதல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீட்டின் மீது குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குருணாகலில் உள்ள அவரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அவரின் வீட்டுக்கு பலத்த சேதம்...

ரூபவாஹினி – ITN பணிப்புறக்கணிப்பு

அரச ஊடக நிறுவனங்களான ரூபவாஹினி மற்றும் ITN என்பன பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.அத்துடன், இன்று இடம்பெற்ற கலகம் தொடர்பில் செய்தி வெளியிட முடியாமல் போனமை குறித்து வருந்துவதாக அந்நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

காலிமுகத்திடலுக்கு வந்தார் கர்தினால்

பேராயார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் காலிமுகத்திடலுக்கு வருகை தந்துள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார்.

மஹிந்தவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட விதம் (Photos)

அப்பாவி மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளால் இலங்கை தற்போது பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.இவ்வாறானதொரு பின்னணியில் மஹிந்தவின் ஆதரவாளர்களினால் இன்று நாடு முழுவதும் கலகலப்பு ஏற்பட்டுள்ளது.பணம் கொடுத்தும், மது அருந்தியும்,...

நாட்டை விட்டு சென்றார் யோஷித?

பிரதமரின் மகனான யோஷித ராஜபக்ஷ இன்று முற்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் எயார்லைன்ஸுக்கு சொந்தமான SQ 469 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் இன்று...

நாடு முழுவதும் ஊரடங்கு

நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியினுள், மக்கள் ஒன்று கூடல்களை மேற்கொண்டு, வன்முறை சம்பவங்களில்  ஈடுபட்டு...

UPDATE:மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு

UPDATE: உடன் அமுலாகும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முந்தைய செய்தி:கொழும்பின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.கொழும்பு...

காலி முகத்திடல் சம்பவம்: ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

அரச ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

Latest in News