Monday, May 18, 2026
26.1 C
Colombo

செய்திகள்

கலகம் செய்வோரை சுட்டுத்தள்ள உத்தரவு

பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது நபர்களுக்கு தீங்கிழைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அனைவரின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முப்படையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் உலக வங்கியின் அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்காளிகளின் இலக்குகளை அடைந்து கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட்...

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் (Photos)

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அலரிமாளிகைக்கு முன்பாக அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தாக்குதலில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

பசிலின் மல்வானை வீடு தீக்கிரை (Photos)

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மல்வானை வீடு இன்று தீக்கிரையாக்கப்பட்டது.

மஹிந்தவை கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நேற்று அலரி மாளிகையில் வெடித்த வன்முறையை ஒழுங்குப்படுத்திய குற்றச்சாட்டில் அவரை கைது செய்து உரிய...

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்தார் சஜித்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்போதைய தேசிய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.இந்த கலந்துரையாடலில் திறைசேரியின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தனவும் கலந்துகொண்டார்.இந்த நெருக்கடியை சமாளிக்க தனது கட்சி...

பொலிஸ் மா அதிபர் – இராணுவத் தளபதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாளை (11) காலை 10.00 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...

58 சிறைக் கைதிகளை காணவில்லையாம்

வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க...

கோட்டாகோகம தாக்குதல்: விசாரணை நடத்துமாறு CIDக்கு பணிப்புரை

நேற்று (09) கோட்டகோகமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.காலி முகத்திடலில் கோட்டகோகம போராட்டம் 32ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.அவர்கள் தொடர்ந்து...

ஒரு இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினர்

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள்  ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குசென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில்...

Popular

Latest in News