கம்பஹா நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு
கம்பஹா நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மஹிந்த – பசில் ஆகியோரின் பயணத் தடை மேலும் நீடிப்பு
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு...
பொருளாதார நெருக்கடி வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை
பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுதலை செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி மனு...
கோட்டா கைதாவார் என பயந்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட முதியவர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறியமை மற்றும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தியை கேட்டு முதியவர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.வத்தளை ஹுனுப்பிட்டி பகுதியில் நேற்று...
அமைச்சு செயலர்களின் பெயர்களுடன் வர்த்தமானி வெளியீடு
28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நிதி அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா...
திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பம்
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷ உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி திரிபோஷ விநியோகிக்கும் நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாவின் விசா காலத்தை நீடித்தது சிங்கப்பூர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாவுக்கு 14 நாட்கள் குறுகியகால...
இன்று பெற்றோல் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்
மேல் மாகாணத்தில் இன்று (27) பெற்றோல் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களைக் காட்டும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 198 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 92 ஒக்டேன் பெற்றோல் இன்று வழங்கப்படவுள்ளது.
சபைத் தலைவராக சுசில் பிரேம்ஜயந்த் நியமனம்
நாடாளுமன்றத்தின் தலைவராக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர்
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடுப்பகுதிக்கு பின்னர், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.நாட்டில் ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருளை வழங்க மட்டுமே நிதி இருக்கிறது.ஒகஸ்ட்...
Popular
