Thursday, July 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்ஆரோக்கியம்இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா, குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்றவை நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது.

இதனால் சிறுவர்கள மற்றும் பெரியவர்கள் தவறாமல் கைகளை கழுவ வேண்டும் என்றும் குறிப்பாக வகுப்பறைகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது முக கவசத்தை அணிவது மிக முக்கியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles