அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழிநுட்பம் போதாது என்ற அறிக்கை மன்றிற்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது . இந்நிலையில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மாணவனது மரணம் தொடர்பில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வன்பொருளில் சேமிக்கப்பட்டிருந்த காணொளிகள் மௌலவியின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது . அதனை மிள பெற்றுக்கொள்வதற்கு நீதிவானின் உத்தரவிற்கமைய கடந்த நீதிமன்ற தவணைகளில் அரச கல்முனை அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அத்திணைக்களம் தங்களிடம் அழிக்கப்பட்ட காணொளிகளை மீளப்பெறுவதற்கான தொழிநுட்பம் இல்லை என அறிக்கை மன்றிற்கு சமர்ப்பித்ததை தொடர்ந்து அழிக்கப்பட்ட காணொளிகளை பெற்றுக்கொள்வதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் உள்ள தொழிநுட்ப பிரிவிற்கு அனுப்பி வைத்து மீள அழிக்கப்பட்ட காணொளிகளை பெற வேண்டும் என மரணமடைந்த மாணவன் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றிற்கு விண்ணப்பம் செய்தனர்.இதனை அடுத்து நீதிவான் குறித்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் சம்பவ தினம் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காணொளிகளை வன்பொருளில் அழித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை என்ற வாதப்பிரதிவாதம் மன்றில் சட்டத்தரணிகளினால் ஆட்சேபனை முறையில் முன்வைக்கப்பட்டது.இதன்போது பொலிஸார் குறித்த சிசிடிவி தொழிநுட்பவியலாளரை அரச சாட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்றில் தெரிவித்தனர்.
மேலும் குறித்த வழக்கு தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆந் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
