Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீட்டின் மேல் மாடியிலிருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

வீட்டின் மேல் மாடியிலிருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்

குருநாகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் குருநாகல் – ஹிந்தகொல்ல -கல்பொத்தவத்தை பிரதேசத்தை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சிறுவனின் தாய் வெளிநாடு சென்றிருந்ததாகவும், அவர் தனது பாட்டியின் பராமரிப்பில் இருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து அவர் தவறி விழுந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், சிறுவன் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles