தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பல பகுதிகளில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மூன்றாம் கட்டத்துக்கு உயர்த்தியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, இமதுவ, நாகொட, யக்கலமுல்ல, களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலலவிட்ட, மத்துகம, மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர, அக்குரஸ்ஸ, ஹக்மன ஆகிய பகுதிகளும் எச்சரிக்கைக்குரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறையின் பிரதேசங்கள் மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
