Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்பணயக் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் - ஹமாஸ் எச்சரிக்கை

பணயக் கைதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் – ஹமாஸ் எச்சரிக்கை

காசா பகுதியில் வசிப்பவர்களை குறிவைத்து முன் எச்சரிக்கையின்றி இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தினால், தன்னிடம் உள்ள பணயக்கைதிகளை கொன்று விடுவோம் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேலில் இடம்பெற்ற யுத்த மோதல்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 687 ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஹமாஸ் அமைப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதிக்கு அருகில் உள்ள தெற்குப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது.

நேற்றிரவு காஸா பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத இலக்குகளை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகளால் தாக்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.

காசாவில் உள்ள அனைத்து ஹமாஸ் தளங்களையும் காலி செய்யுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் “சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும்”. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles