சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை (26) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தாதியர் அரசியலமைப்பினை இரகசியமாக திருத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனிடையே, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை கருத்திற் கொண்டு, சுகாதார அமைப்பில் காணப்படும் குறைபாடுகளை சரி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.