Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அரசியல்யாப்புக்கு முரணானது

உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அரசியல்யாப்புக்கு முரணானது

நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள், நகர, மாநகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் அரசியல்யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றின் இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

குறித்த திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் விசேட பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பு அவசியம் என்றும் உயர் நீதிமன்றின் வியாக்கியனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles