Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 54 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் 26 வயதுடையவர் எனவும், குறித்த கேரள கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு எடுத்துச் செல்ல அவர் தயாராக இருந்ததாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவே சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அத்துடன் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles