Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2048 இல் மின்சார பேருந்துகள் சேவைக்கு

2048 இல் மின்சார பேருந்துகள் சேவைக்கு

2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், பொதுப் போக்குவரத்து சேவையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைகள் மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07)  இடம்பெற்றது.

பயணிகள் போக்குவரத்து துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்துத் துறையில் உயர் தரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

பயணிகள், பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் E- E- ticketing  முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் மாகாண மட்டத்தில் கூடிய விரைவில் கருத்துக்கள் பெறப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles