Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதவி விலக வேண்டிய அவசியமில்லை - சுகாதார அமைச்சர்

பதவி விலக வேண்டிய அவசியமில்லை – சுகாதார அமைச்சர்

மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அண்மையில் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பதவி விலகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாம் நாடாளுமன்றத்தில் குறித்த அறிக்கையை வெளியிட்ட அன்றே திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம.

அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles