அலவத்துகொடவில் உள்ள கமநல சேவை நிலையத்தின் இரண்டு உத்தியோகத்தர்கள் 100,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மாத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
