Thursday, May 7, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றின் மாடியிலிருந்து கீழே குதித்த நபர் வைத்தியசாலையில்

நீதிமன்றின் மாடியிலிருந்து கீழே குதித்த நபர் வைத்தியசாலையில்

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றின் மாடிக்கட்டடத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை கண்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கு பொலிஸார் அழைத்துச் சென்ற போது, ​​சந்தேக நபர் நீதிமன்ற கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2150 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கண்டி தலைமையக காவல்நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் நேற்று மாலை நீதிமன்றத்துகு அழைத்துச் செல்லப்பட்ட போது காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி, இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles