Thursday, May 7, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளை வன்புணர்ந்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை

மகளை வன்புணர்ந்த தந்தைக்கு 110 வருட கடூழிய சிறைத்தண்டனை

தனது 11 வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும், 06 இலட்சம் ரூபா நட்டஈடு மற்றும் 8 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் நேற்று (05) உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான தந்தை 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் பல சந்தர்ப்பங்களில் தனது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என உரகஸ்மஹந்திய பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்தபோது, ​​தனது தந்தை குடித்துவிட்டு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அயலவர் ஒருவரிடம் சிறுமி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles