Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசலவைத்தூள் பொதிகள் தடை செய்யப்படும் அறிகுறி

சலவைத்தூள் பொதிகள் தடை செய்யப்படும் அறிகுறி

சலவைத்தூள் பொதிகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதனை தடை செய்வதற்கு அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் துறைகள் கவனம் செலுத்தியுள்ளன.

20 கிராம் மற்றும் 20 மில்லி சலவைத்தூள் மற்றும் சலவை திரவ பொதிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், 250 கிராம், 500 மற்றும் ஒரு கிலோ பொதிகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த வகை பொலித்தீன் பாவனையை குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குளங்கள் மற்றும் ஆறுகளில் சலவைத்தூள் பொதிகளை அதிகமாக வீசுவதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles