Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலை கொடுத்து தடுப்பூசி கொள்வனவு செய்வதாக குற்றச்சாட்டு

அதிக விலை கொடுத்து தடுப்பூசி கொள்வனவு செய்வதாக குற்றச்சாட்டு

7,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடிய வைரஸ் தடுப்பு மருந்தான ‘கான்சிக்ளோவியன்’ ஐ 77,000 ரூபாவுக்கும், 200 ரூபாவுக்கு கிடைக்கும் ‘லினோசோலிட்’ என்ற என்டிபயோடிக் மருந்தை 1,200 ரூபாவுக்கு வாங்க சுகாதார அமைச்சு தயாராகி வருவதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய நிதி ஊடாக இந்த மருந்துகளை கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும, இந்த பரிவர்த்தனை காரணமாக, நாடு தேவையற்ற கடனில் உள்ளது.

ஆனால் வழிகாட்டுதல்கள் என்று அழைக்கப்படும் இந்த வகையான தொழில்நுட்ப திருட்டை நிறுத்த சுகாதார அமைச்சு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஏனெனில் தீர் மானம் மேற்கொள்ளும் சில அதிகாரிகளும் இந்த பரிவர்த்தனைகளால் பயனடைவதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles