Sunday, March 29, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரியம்மை நோயால் 8 கால்நடைகள் உயிரிழப்பு

பெரியம்மை நோயால் 8 கால்நடைகள் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் பெரியம்மை நோய் காரணமாக 8 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

அத்துடன், 15 கால்நடைகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளதாக இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கு, தோல் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படல், கால்கள் வீங்குதல், பசியின்மை, காய்ச்சல் முதலான அறிகுறிகள் ஏற்படும்.

நோய்த் தொற்றுக்குள்ளான கால்நடைகளை தனிமைப்படுத்துவதன் மூலம், இந்த நோய் பரவலைத் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles