Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும்

எரிபொருள் ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும்

எதிர்வரும் காலங்களில் எரிபொருளுக்கான QR குறியீடு வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் புதுப்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, இன்று (8) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் வாராந்தம் செவ்வாய் கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்படும்.

வார இறுதி நாட்களிலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் செயல்படுவதன் காரணமான விநியோகச் செலவைக் குறைக்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் ஒதுக்கத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles