Friday, May 8, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎடை குறைந்த முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமாம்

எடை குறைந்த முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமாம்

வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு இந்தியாவில் இருந்து குறைந்த விலையில் எடை குறைந்த முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சுமார் 50 முதல் 55 கிராம் எடையுடையதாகவும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்ட முட்டைகள் 35 முதல் 40 கிராம் எடையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறைச்சி, மீன், உலர்மீன், டின் மீன் போன்ற மாற்று உணவுகளின் விலையேற்றம் காரணமாக முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும், முட்டைக்கான அதிக தேவையை குறைக்க மாற்று உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என அவர் கூறினார்.

கடந்த ஏழெட்டு மாதங்களில் முட்டை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறைந்துள்ள நிலையில் முட்டை விலை குறைக்கப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ, சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சமாளிக்க முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles