Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகிறார் சஜித்தின் சகோதரி

அனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகிறார் சஜித்தின் சகோதரி

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயகொடி, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு துலாஞ்சலி ஜயகொடியுடன் இடம்பெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவரின் சட்டத்தரணி விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்தைக் கையாளும் நோக்கில், மேற்படி சம்பவம் தொடர்பில் சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களையும், அவதூறான கருத்துகளையும் பரப்பி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், அவதூறான அறிக்கைகளுக்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க துலாஞ்சலி ஜயக்கொடி உத்தேசித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles