Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகல்விக்கே முன்னுரிமை வழங்குவேன் - சுசில் பிரேமஜயந்த

கல்விக்கே முன்னுரிமை வழங்குவேன் – சுசில் பிரேமஜயந்த

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவது எனது முதன்மையான விடயம் அல்ல, பிள்ளைகளின் கல்விக்கே எனது முதல் முன்னுரிமையை வழங்கியுள்ளேன் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

கல்விக்கு இரண்டாம் இடத்தையும் தேர்தலுக்கு முதல் இடத்தையும் வழங்க வேண்டும் என யாராவது கூறினால் அது அவர்களின் கருத்து.

கடந்த சில ஆண்டுகளில், கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் கல்வி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் பொருளாதாரச் சிக்கலால் நமது நாட்டிற்கு ஒரு தனித்துவமான சூழ்நிலை வந்தது.

இந்த பொருளாதார சூழ்நிலையை சமாளிப்பது முக்கியம். தேர்தல் நடத்தப்பட்டாலும், குழந்தைகளின் கல்விக்கோ, பாடசாலைப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், ஆசிரியர்களைப் பெறுவதற்கோ எந்தப் பயனும் இல்லை.

கடந்த காலங்களில் தேர்தல்கள் ஓரிரு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் நாட்டின் கல்வி பாதிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கல்விக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles