கம்பளை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் எத்கல பகுதியில் நேற்றிரவு காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் குறித்த இளைஞர்கள் மோட்டார் வீடு திரும்பும் போது, கம்பளையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காருடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பத்தொன்பது மற்றும் இருபது வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் முன்னால் பயணித்த மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அருகில் உள்ள கடை ஒன்றில் இந்த விபத்து நடந்துள்ளமை சிசிடிவி கெமராவிலும் பதிவாகியுள்ளது.
காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
