Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகத்தோலிக்க திருச்சபையிடம் அல்ல, கடவுளிடமே மன்னிப்பு கோரினேன்!

கத்தோலிக்க திருச்சபையிடம் அல்ல, கடவுளிடமே மன்னிப்பு கோரினேன்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையிடம் அல்ல கத்தோலிக்க மக்களிடமும் கடவுளிடமும் தான் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றமையினால் மற்றவர்கள் செய்த தவறுக்கு தாம் பொறுப்பு கூற வேண்டியுள்ளதாகவும் அதற்காக கத்தோலிக்க மக்களிடமும் இறைவனிடமும் மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கத்தோலிக்க திருச்சபையும், கத்தோலிக்க மக்களும் இருவர் என கூறியுள்ள அவர், இந்நாட்டில் கத்தோலிக்க, கிறிஸ்தவ, அடிப்படைவாதம் என பல்வேறு மதங்களைச் சேர்ந்த 20 இலட்சம் மக்களில் 10 இலட்சம் பேர் தமக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர் என்றார்.

தான் எப்போது வேண்டுமானாலும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு செல்வதகாவும் அவர் கூறினார்.

அத்துடன், தீர்ப்பில் உள்ள உண்மைகளின் அடிப்படையில் சமூகத்திற்கு தேவையானதை மாத்திரமே வழங்குவேன் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles