Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்குட்டிக்கு சிகிச்சையளிப்பு

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்குட்டிக்கு சிகிச்சையளிப்பு

கஹல்ல பலுலேகலே சரணாலயத்தில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் யானைக் குட்டிக்கு நிகவெரட்டிய வனஜீவராசிகள் வைத்தியப் பிரிவின் கால்நடை வைத்தியர் இசுரு ஹேவா கோட்டகே உள்ளிட்ட அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் யானைக்குட்டியொன்று கல்கிரியாகம வனஜீவராசி அலுவலக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்ட குறித்த யானைக்குட்டிக்கு ஐந்து வயது இருக்கும் என வனவிலங்கு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

யானை குட்டி 05 அடி உயரம் கொண்டதுடன், நன்கு வளர்ந்த ஒரு ஜோடி தந்தங்களை உடையது.

நிகவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவா கோட்டகே அதற்கு தேவையான சிகிச்சையை வழங்கினார்.

கல்கிரியாகம வனஜீவராசி அலுவலக அதிகாரிகளும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles