Friday, September 19, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழக அகதிகள் முகாமிலிருந்த இலங்கையின் 9 பாதாள குழு உறுப்பினர்கள் கைது

தமிழக அகதிகள் முகாமிலிருந்த இலங்கையின் 9 பாதாள குழு உறுப்பினர்கள் கைது

போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடும் குற்றக் கும்பலைச் சேர்ந்த குணா, லடியா, வல்லே சுரங்க உள்ளிட்ட 9 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் நேற்று (19) இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினால் (NIA) தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த போது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீ. குணசேகரன் மற்றும் குணா என அழைக்கப்படும் பிரேம் குமார், பூகுட்டி கண்ணா என அழைக்கப்படும் புஷ்பராஜா, மொஹொமட் அஸ்மின், அலஹப்பெருமகே சுனில் காமின் பொன்சேகா, ஸ்டென்லி கெனடி பெர்னாண்டோ, லடியா, தனுக்க ரொஷான், வெல்லா சுரங்க என அழைக்கப்படும் கமகே சுரங்க பிரதீப், திலிபல் என அழைக்கப்படும் திலீபன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles