இலங்கையின் தேசிய அரிசி உற்பத்தி கடந்த பெரும்போகத்தின் போது சுமார் 50 ஆண்டுகளின் பின்னர் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இரசாயன உரத்தட்டுப்பாடு மற்றும் தவறான இறக்குமதி தடைகள் என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய 2021/2022 பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் அளவு 2020/2021 பெரும்போகத்தை விடவும் 33.76% குறைவாகவுள்ளது.
கடந்த பெரும் போகத்தில் 766,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெல் பயிர் அறுவடை செய்யப்பட்டது.
இதனுடாக 1.93 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.