கட்டுப்பாட்டு விலை மீறி அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த ஹங்வெல்ல பல்பொருள் அங்காடியொன்றுக்கு 1,020,000 ரூபா அபராதம் விதித்து அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலை மீறி மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இந்த அபராதம் விதிக்க்பட்டது.
தெமட்டகொட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பல்பொருள் அங்காடி நடத்தும் முட்டை விற்பனை மோசடி அம்பலமானது.
இலங்கையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தமைக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
