Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜொன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜொன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சதொச ஊழியர் குழுவை பணியிலிருந்து நீக்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்படுத்தியமைக்காக அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்ல முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள், குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.டி.ஏ.வின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பணிப்பாளர் மொஹமட் சாகிர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குற்றப்பத்திரிகைகள் தொடர்பான பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன்பின்னர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நவம்பர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles