Sunday, May 17, 2026
30 C
Colombo
சினிமாநயன் - விக்கி தம்பதிக்கு இரட்டை குழந்தை

நயன் – விக்கி தம்பதிக்கு இரட்டை குழந்தை

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.

இது குறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில், “நயனும், நானும் பெற்றோர் ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளுடன் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம்.

எங்கள் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து இரண்டு ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் எங்களிடம் வந்துடைந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் செப்டெம்பர் கடைசி வாரமே குழந்தைகளை பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles