Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் உத்தியோகத்தரை கடித்த பெண் கைது

பொலிஸ் உத்தியோகத்தரை கடித்த பெண் கைது

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரை கடித்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த போது, ​​குறித்த பெண்ணும், மற்றுமொரு குழுவினரும் மதுபோதையில் தகறாரில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த பெண்ணும் மற்றுமொரு நபரும் இணைந்து தாக்கி கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடித்ததில் பொலிஸ் உத்தியோகத்தரின் கை, விரல் மற்றும் முகம் ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அவர் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles