சில வகையான உணவு மற்றும் பானங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கடந்த 6 ஆம் திகதி தெரிவித்தது.
அவ்வாறு குறைக்கப்படவுள்ள விலைகள் தொடர்பில் இன்று (08) அறிவிக்கப்பட இருந்தது.
எவ்வாறாயினும், இந்த விலைகள் தொடர்பான அறிவித்தல் நாளை (09) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் இன்று (8) அறிவிக்கப்பட்டதன் பின்னர், உணவு மற்றும் பானங்களின் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
