Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான கடனை நிறுத்தியது சீனா

இலங்கைக்கான கடனை நிறுத்தியது சீனா

இலங்கைக்கான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான கடனுதவியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் நிறுத்தப்பட்டமையை அடுத்து கடவத்தைக்கும் மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

அத்துடன் இந்த கடன் நிறுத்தல் காரணமாக சுமார் 2000 இலங்கையர்களின் தொழில்களும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இலங்கை நிறுத்தியுள்ளமை ஆகியவற்றை கருத்திற்கொண்டே இலங்கை அரசாங்கத்தின் சீனாவின் எக்ஸிம் வங்கி கடனை இடைநிறுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles