நாட்டில் வருடாந்தம் 250 – 300 புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பதாக மஹரகம வைத்தியசாலையின் சிறுவர் புற்றுநோய் நிபுணர் வைத்தியர் சஞ்சீவ குணசேகர தெரிவித்துள்ளார்.
சிறுவர் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவிக்கையில்,
2021ஆம் ஆண்டில் 1,032 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர்.
மேலும், புகைபிடித்தல் மற்றும் வெற்றிலை உண்பது பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணமாகும். எனினும், குழந்தைப் பருவத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு இதுபோன்ற குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.
எவ்வாறாயினும், வருடாந்தம் 1,000 முதல் 1,200 சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றர் என்றார்.