Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்கான பெண் மரணம்

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் மரணம்

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பட்டல்கல தோட்டத்தில் பயணித்த 7 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

மேலும் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் 14 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குவதாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

குளவி கொட்டுக்கு இலக்கான பெண் அதி சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வேலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles