ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை காணும் வாய்ப்பு இவ்வாரம் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி குறித்த வானியல் நிகழ்வினை இலங்கையர்களும் அவதானிக்க முடியும் என ஆர்தர். சி. கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி இரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு தெளிவான வான் பகுதியில் இதனை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவினை அவதானிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
