Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயம்

பாடசாலையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயம்

சிலாபம்- அம்பகந்தவில – புனித ரோகஸ் கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிக சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலையின் 11ஆம் தரம் மற்றும் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இரு மாணவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு இடையில் உள்ள இடத்தை மூடுவதற்காக தற்காலிகமாக கட்டப்பட்ட மதில் ஒன்று இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அந்த சுவருடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு கேட்டை மூட முற்பட்ட போது, அது ​​இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles