மலையகம்பதுளையில் கஞ்சாவுடன் இருவர் கைது

பதுளையில் கஞ்சாவுடன் இருவர் கைது

பதுளை- வினீதகம பகுதியில் நேற்று (11) 1960 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த இருவர் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 38 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களும், கொழும்பு 10 – மாளிகாவத்தை – ஜும்மா பள்ளிய வீதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் பதுளையில் இருந்து பசறைக்கு பேருந்தில் பயணித்ததாகவும், கைது செய்யப்பட்ட போது ஒருவரிடம் 1000 மில்லிகிராம் கஞ்சாவும் மற்றையவரிடம் 960 மில்லிகிராம் கஞ்சாவும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சந்தேகநபர்களும் எதற்காக கொழும்பு பிரதேசத்தில் இருந்து பதுளைக்கு வந்தனர் என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கொழும்பு பகுதியில் எதேனும் குற்றச்சாட்டில் தொடர்பு உடையவர்களாக இருக்கின்றனரா என விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles