எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக பாடசாலை அமைப்பில் அத்தியாவசியமான மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, அதிபர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் 4718 அதிபர் நியமனங்கள் நவம்பர் மாத தொடக்கத்தில் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
