Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்புக்கு மேல் பறப்பதற்கான கட்டணம் அதிகரிப்பு

கொழும்புக்கு மேல் பறப்பதற்கான கட்டணம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் விமானச் சுழற்சி வசதிக் கட்டண விதிமுறைகள் எண். 1ஐத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கிள்ளது.

கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாக பறக்கும் விமானங்களுக்கு விமான போக்குவரத்து கட்டணத்தை விதிக்கும் வகையில் 1981 ஆம் ஆண்டு விமான போக்குவரத்து வசதிகள் ஒழுங்குமுறைகள் இயற்றப்பட்டன.

குறித்த விதிமுறைகள் கடந்த காலத்தில் திருத்தப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது.

எனவே, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் கொள்கைகள் மற்றும் தற்போதைய உலகளாவிய போக்குகளைக் கருத்தில் கொண்டு, விமான போக்குவரத்து வசதிகள் விதிமுறைகள் திருத்தப்பட்டு, விமானப் போக்குவரத்து வசதிகள் விதிமுறைகள் 2023 எண் 1 என வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles