சிலாபம் – நீர்கொழும்பு பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
வென்னப்புவ பிரதேசத்தில் இபோச பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் நடத்துனரை கைது செய்தமை நியாயமற்றது என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.