Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது

4 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது

அளுத்கம சுற்றுலாத் தலமொன்றில் 4 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

14, 15 மற்றும் 16 வயதுடைய நான்கு மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் அதிபரினால் அளுத்கம பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு பாடசாலை மாணவர்களும் சந்தேகநபர்கள் இருவரும் சில காலமாக பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக தோடர்பு கொண்டு பல தடவைகள் அளுத்கம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிக்கு அழைத்து சென்று குடித்துவிட்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இந்த மாணவர்களின் உணர்வுகளில் ஏற்பட்டுள்ள வித்தியாசம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்தி மாணவர்களிடம் கேட்ட போது இது தொடர்பான அனைத்து தகவல்களும் தெரியவந்துள்ளது.

அதன்படி, அளுத்கம பிரதேசத்தில் வைத்து 45 மற்றும் 39 வயதுடைய சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்ததுடன், அவர்களது ஸ்மார்ட்ஃபோன்களை சோதனையிட்ட போது குறித்த காணொளி காட்சிகளில் இந்த மாணவர்களும் இருந்ததை பொலிஸ் உத்தியோகத்தர்களால் காண முடிந்தது.

நான்கு மாணவர்களையும் அவர்களது பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர்கள் எல்லாவற்றையும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

சில தினங்களில் இந்த மாணவர்கள் பாடசாலையில் வகுப்புகளுக்கு செல்லாமல் சந்தேக நபர்களுடன் சுற்றித்திரிவதும் தெரியவந்துள்ளது. இவர்களில் மூன்று மாணவர்கள் அளுத்கம பொலிஸ் எல்லைக்குட்பட்டவர்கள் மற்றும் மற்றைய மாணவர் பெந்தோட்டை பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்.

பொலிஸ் காவலில் உள்ள நான்கு மாணவர்களும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles