ஆயுர்வேத துறைக்காக நாட்டில் கஞ்சா வளர்க்க அனுமதி வழங்கப்படும் என உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் புதிய சட்டமூலம் தொடர்பான விடயங்களை விளக்கினார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டமூலத்தின் மூலம் கஞ்சா வளர்ப்பதற்கான அதிகாரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
