Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெரொமுக்கு இங்கிலாந்தில் தஞ்சம் கோர முடியுமாம்

ஜெரொமுக்கு இங்கிலாந்தில் தஞ்சம் கோர முடியுமாம்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரொம் பெர்னாண்டோ, இலங்கையில் அவருக்கு எதிராக பிரசுரிக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கைகளை மேற்கொள்காட்டி ஐக்கிய இராச்சியத்தில் தஞ்சம் கோர முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் அத்தியட்சகர் இதனை கூறியுள்ளார்.

மேற்படி விடயங்களை மேற்கொள்காட்டி அவர் எளிதில் தஞ்சம் கோரலாம் மற்றும் தனது குடும்பத்துடன் அவர் இங்கிலாந்திலே தங்கலாம்.

மத நல்லிணக்கம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து மற்றும் பணமோசடி சம்பந்தமான குற்றச்சாட்டுகளின் கீழ் போதகர் ஜெரொம் பெர்னாண்டோ கைது செய்யப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு முன்னதாக சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார்.

மேலும் அவர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles