பதுளை – கெப்பட்டிபொல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வேனில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வேனின் பிரேக் இயங்காததால், சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல்போக, வேன் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 23, 30 மற்றும் 26 வயதுடைய மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
